--- --:--:-- --

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

5

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை அடுத்த இலுப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

 

இவர் தனது வீட்டில் சின்ன கொம்பன் வெள்ளை கொம்பன், கொம்பன் 2, சண்டியன் உள்ளிட்ட புகழ்பெற்ற காளைகளை வளர்த்து வருகிறார். தற்பொழுது பொங்கல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் வகையில் காளைகளுக்கு அவரே பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon