--- --:--:-- --

வெள்ள நிவாரணத் தொகை.. வீடு வீடாக சென்று நேரடி ஆய்வு..!

4

சென்னையில் வெள்ள நிவாரணத் தொகையை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளில் நேரடியாக ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

 

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்திற்காக ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

தமிழக அரசின் 6,000 ரூபாய் வெள்ள நிவாரண தொகையை பெற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் சுமார் 50,000 ரேஷன் கார்டில் இல்லாதவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணியை நியாய விலை கடை பணியாளர்கள் வருவாய்த்துறையிடம் மேற்கொண்டுள்ளனர்.

 

விண்ணப்பித்தவர்கள் வீடுகளுக்கு முன்பு அவர்கள் புகைப்படங்களை எடுத்து அதற்கான செயலியின் அதிகாரிகள் செயலியை பதிவேற்றம் செய்வார்கள். இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தகுதியானவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. வெள்ள நிவாரணம் பெற சென்னையில் ஆயிரம் பேரும், திருவள்ளூரில் 22,000 பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon