--- --:--:-- --

கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

Untitled-3 copy

போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி சண்டே மார்க்கெட் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு கூடிய சூழலில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்புமணி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

 

மேலும் புதுச்சேரி நலன்கருதி ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடப்பதாகவும் இந்த பணிகளுக்கு பொதுமக்கள் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon