மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். அவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி திவ்யாவை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்திருந்தார்.இந்நிலையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரிழந்ததை மறைப்பதற்காக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என பொய் சொல்லி தாய் சேய் இருவரின் சடலத்தையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் அங்கே இருந்து தப்பி ஓடி விட்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளார்.






