கார் விற்பனை குறைந்ததால் மாருதி சுசுகி இந்தியா தனது கார் உற்பத்தி தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூடுவதாக அறிவித்துள்ளது. வரும் ஏழாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி கார் உற்பத்தி நடைபெறாது என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஹரியானாவின் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கார் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 170 கார் உற்பத்தி குறைந்தது மேலும் 9552 கார்கள் ஏற்றுமதி ஆகவில்லை. இதன் எதிரொலியாகவே கார் உற்பத்தி தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மாருதி சுசுகி முடிகிறது.