பிரதமருடன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திடீர் சந்திப்பு..!
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தெலுங்கானா முதலமைச்சர் ரேவதி நிலுவையில் உள்ள நிதி பகிர்வுகள் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினார்.
தெலுங்கானா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை சென்று பேசினார். அப்பொழுது துணை முதலமைச்சர் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள நிதி பகிர்வுகள் ஆகியவை குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினார்.





