முதல்வருக்கு எதிராக போர் கொடி.. பெண்களின் தலை முடியை பிடித்து இழுத்த போலீஸ்..!
கேரளாவில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியின் பொழுது பெண்களின் தலை முடியை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் பொழுது முதலமைச்சருக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரஸ், கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டினர். அப்பொழுது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் பொழுது வன்முறை ஏற்பட்டது. அதேபோல பெண் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உடைகள் தலை முடியை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





