--- --:--:-- --

தேர்வு நேரம் முடிவதற்கு முன் பெல் அடித்த நிர்வாகம்.. கல்லூரி மீது வழக்கு..!

4

தேர்வு நேரம் முடிவதற்கு முன்பே பெல் அடித்து விடைத்தாள்களை வாங்கிய கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தென்கொரியாவில் உள்ள கல்லூரியில் நடந்த தேர்வில் 39 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

 

பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் அடுத்தடுத்து எட்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு நேரம் முடிவதற்கு 90 வினாடிகளுக்கு முன்பே பெல் அடித்து விடைத்தாள்களை கல்லூரி நிர்வாகம் வாங்கியுள்ளது.

 

இதில் அதிருப்தி அடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஒரு நிமிடம் 20 வினாடிகள் தானே என்று பலர் கூறியும் தேர்வு மாணவர்களின் வேலை வாய்ப்பை தீர்மானிப்பதால் இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon