--- --:--:-- --

ரூமுக்குள் சென்று பூட்டிய மகன்.. பெற்றோருக்கு அதிர்ச்சி..!

7

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பள்ளி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரக்காணம் அடுத்த கலிகுப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்.

 

16 வயது சிறுவனான இவர் மரக்காணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று படிக்க சொல்வதாக கூறிவிட்டு மாடியில் உள்ள தனது புத்தகங்களை எடுக்கச் சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த யுவராஜின் பெற்றோர் மகனின் அறைக்கு சென்று பார்த்த பொழுது அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon