கர்நாடகாவில் பெண்மணியை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரம்..!
கர்நாடக மாநிலம் பலகாவியில் காதலனின் தாயாரை பெண் வீட்டார் நிர்வாணப்படுத்திய சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கை தான் இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு சென்று இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





