சேலத்தில் மருத்துவர்களுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகள்..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் காலதாமதத்தால் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருவதாக பொதுமக்களும் நோயாளிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளை சந்தித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் சமீபகாலமாக மருத்துவர்கள் குறித்த நிறுத்தற்கு வராமல் 11 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு வருவதால் நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். டயாலிசிஸ் நோயாளிகள் அதிக அளவில் வருவதால் அதற்கான உபகரணங்களும் நிபுணர்களும் இல்லாததால் அவர்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரியிடம் கேட்ட பொழுது மருத்துவத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்றும் விரைவில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அப்பொழுது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் விளக்கம் அளித்தார்.





