ரூ.14 கோடி மோசடி..பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கைது
பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரின் மகன் செல்வ ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் திருச்சி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்ததாக பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது புகார் எழுந்தது.
பண முதலீடுகள் செய்த வகையில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டதாக மொத்தம் 635 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் ஏற்கனவே மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதனின் மனைவி திருச்சி பொருளாதாரம் காவல்துறை டிஎஸ்பி லில்லி கிரேஸ் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி, ஏமாற்றுதல் கூட்டு சதி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் சுமார் 14 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக திருச்சி பொருளாதாரம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





