பிரேத பரிசோதனைக்கு பின் காணாமல் போன கண்கள்.. உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு..!
பிரேத பரிசோதனைக்கு பின் பெண்ணின் சடலத்தில் கண்கள் அகற்றப்பட்டிருக்கும் சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் குணால் மாவட்டத்தில் உள்ள ரசோல்லா கிராமத்தை சேர்ந்த பூஜா தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக குணாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த பொழுது அதில் கண்கள் அகற்றப்பட்டிருப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளனர்.
அப்பொழுது உடலுறுப்பு திருட்டில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





