பெண் குழந்தைகளிடம் நைசாக பேசி சாக்குப்பையில் கடத்த முயன்ற ஜோடி..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பட்டம் குடி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் இன்று காலை 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆணும், பெண்ணும் அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பது போல் நடமாடி வந்துள்ளனர்.
அங்கு தொடக்கப்பள்ளி அருகே வந்த உடன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் பின்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த சாக்குப்பையில் போட்டு கடத்த முயலும் பொழுது உடனடியாக குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்த பொழுது அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அச்சமடைந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





