--- --:--:-- --

சென்னை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடும் விஜய் மக்கள் இயக்கம்..!

7

சென்னை மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர்கள் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இத்துடன் வலைதள பதிவில் சென்னையில் புயல் கனமழை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதி பேருந்து உதவி கேட்டு அதிகமான குரல்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த இக்கட்டான சூழலில் மக்களை இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon