facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தைசேர்ந்த இளம் பெண் நாடு திரும்பினார்.
உத்திர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நபர் உடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்ற இளைஞரை சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 30 நாட்கள் விசா உடன் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் சென்றிருந்தார். இந்நிலையில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இளம்பெண் அஞ்சு இந்தியா வந்தார்.
அவரிடம் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் அமிர்தசரத்திலிருந்து டெல்லிக்கு விமான மூலமாக அன்று அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு குழந்தைகளை பார்க்க முடியாமல் அஞ்சு தவித்து வருவதாக தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் சென்ற இளம்பின அஞ்சு நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





