மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த நபர்..!
சென்னை அரும்பாக்கத்தில் இரண்டடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து துவாரம் வழியாக கீழே விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சக்தி நகரில் உள்ள இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பின் நடுப்பகுதியில் காற்றோட்டத்திற்காக ஒன்றை அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
அந்த குடியிருப்பில் உறவினர் வீட்டுக்கு வந்த கார்த்திக் என்பவர் இரவு உணவு முடித்து மொட்டை மாடியில் இளைப்பாரிக் கொண்டிருந்த நிலையில் தவறுதலாக அந்த துவாரத்தின் வழியாக கீழே விழுந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் குறுகிய அந்த இடத்தில் பெரிய அளவிலான ஏணியை பயன்படுத்தி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி கயிறு மூலமாக கார்த்திகை கட்டி மேலே தூக்கி மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





