இறந்த குழந்தை உயிருடன் இருப்பதாக கூறி பணம் பறித்த மருத்துவமனை..!
சென்னை குரோம்பேட்டையில் இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற தனியார் மருத்துவமனையின் மீது தம்பதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மனைவி ஷாலினி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையை தேஜஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தேஜஸ்ரீக்கு நேற்று இரவு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை பரிசோதிக்க மருத்துவர்கள் ஐந்து நாட்கள் தங்க வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தையின் உடலை மோசமாக இருப்பதாக கூறியதாகவும் தேஜஸ்ஸ்ரீயை அனுப்ப மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின் இறந்துவிட்டதாக கூறி ஒப்படைத்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அதை மறைத்து பணம் பறிக்கும் நோக்கத்தில் சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





