--- --:--:-- --

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு..!

6

சென்னையில் வாகனங்களில் வேக கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

 

சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆட்டோக்கள் அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகபட்சமாக 60 km வேகத்திலும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்ச 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடனாக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வேக கட்டுப்பாட்டின் மீது வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon