--- --:--:-- --

நடிகை கௌதமியின் சொத்து அபகரிப்பு புகார்.. தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க 3 தனிப்படை..!

2

டிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

பாஜகவில் இருந்த விலகிய நடிகை கௌதமி தனது சொத்துக்களை காரைக்குடியைச் சேர்ந்த பைனான்சியர் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகார் குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதன்படி அழகப்பனின் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் படி அழகப்பன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

 

ஆனால் ஆறு முறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் தலைமறைவாக உள்ள அழகப்பன் அவரது மனைவி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை பிடித்து மூன்று தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon