--- --:--:-- --

பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

7

குடியாத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை வகுப்பறை ஜன்னலில் கட்டி வைத்திருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கேவி குப்பம் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவி வகுப்பு ஜன்னல் கயிற்றால் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

 

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். அதில் தன்னுடைய மகள் பள்ளி வகுப்பறையிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவதாகவும் இதனால் தாங்கள் வகுப்பறையில் தங்களது மகளை கையில் கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தேன் என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon