--- --:--:-- --

மூளைச் சாவடைந்த துப்புரவு பணியாளர்.. உடல் உறுப்பு தானம்..!

6

விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

 

மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக்டோபர் 9ம் தேதி மாலை மூளைச்சாவடைந்து இறந்த நிலையில் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

 

சிறுநீரகம், கல்லீரல், கருவிழி உட்பட ஐந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலி மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

 

பின்னர் அவரின் உடலுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon