--- --:--:-- --

பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை..!

5

சென்னை மதுரவாயிலில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிழங்கு சரவணன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது.

 

இதில் கிழங்கு சரவணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட கிழங்கு சரவணன் மயிலாப்பூரில் உள்ள பதிவேடு குற்றவாளியாக இருந்த நிலையில் ஏற்கனவே பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாருக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon