ஜிம்மில் உடற்பயிற்சி செய்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்தவராக கூறப்படும் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சென்னை கொரட்டூரில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அம்பத்தூர் ஏழாம் வீடு பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்ற 41 வயது நபர் சனிக்கிழமை அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின் அங்கிருந்த குளியல் அறைக்கு சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாக வெளியே வராததால் ஜிம்மில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது யோகேஷ் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை உடனடியாக மீட்டு சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக யோகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






