--- --:--:-- --

சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாய்ந்து முட்டி தூக்கிய மாடு..!

5

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் சிறப்பு தெருவில் ஜோவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று ஜோவியை முட்டி தூக்கி தள்ளியதில் பலத்த காயமடைந்தார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் மாட்டை விரட்டி விட்டு ஜோதியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon