--- --:--:-- --

குழந்தையை கடத்திய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

2

திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை சேலம் ஆத்தூரில் மீட்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

கன்னியாகுமரியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த ஐந்தாம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர்களிடம் அறிமுகமான பெண் முத்துராஜின் ஒரு வயது குழந்தையை கடத்திச் சென்றார்.

 

குழந்தையை காணாமல் முத்துராஜ் அவரது மனைவி ரதியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.

 

சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தில் இளைஞருடன் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக கோவை காவல்துறையினர் கடத்தலில் ஈட்டப்பட்டதாக திலகவதி என்ற பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.

 

மேலும் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் காவல்துறையினர் மீட்டனர். இந்த நிலையில் கைதான திலகவதி விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார்.

 

Right Menu Icon