--- --:--:-- --

41 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்..!

1

ருவமழை காலங்களில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீர் தேவைக்காக மட்டும் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இதனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இதுவரை ஜூன் 12-ம் தேதி முதல் 120 நாட்களில் 92 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பருவமழை பொய்த்து போனதால் கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தராததாலும் 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 41 ஆண்டுகள் கழித்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம்.

 

Right Menu Icon