மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்தபடி பண நோட்டுகளை வீசிய நபர்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பண நோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாலையின் நடுவே காரை நிறுத்தி வைத்துவிட்டு அதன் மீது ஏறி நின்று அந்த நபர் வீசிய ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த மக்கள் கீழே இருந்து முந்தி அடித்து மூடி எடுத்துக்கொண்டனர். இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





