6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறப்பு..!
காலாண்டு விடுமுறை முடித்து தமிழக முழுவதும் ஆறு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மாதம் கடைசி வாரத்துடன் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து ஒரு வார மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
விடுமுறை 2ம் தேதியுடன் முடிந்ததை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகின்றன.
மழலையார் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வரும் ஒன்பதாம் தேதி அதாவது அடுத்த திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடுத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





