பராமரிப்பு பணிகள்.. சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து..!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் விழுப்புரம் அருகிலான வழித்தடத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காலை 11:00 மணி முதல் 3:15 மணி வரை காஞ்சிபுரம் கடற்கரை மற்றும் கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
காந்தி ஜெயந்தியை ஒட்டி விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி கடற்கரையை செங்கல்பட்டு அரக்கோணம் சூலூர் பேட்டை வழிதடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.





