--- --:--:-- --

வந்தே பாரத் ரயிலில் அடுத்த ஆண்டு முதல் படுக்கை வசதி..!

5

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழிதடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக பொது மேலாளர் ஆர் எம் சி தெரிவித்துள்ளார்.

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற செய்தியாளர்களை சந்தித்த பொது மேலாளர் தமிழ்நாடு அரசு கேட்கும் நேரத்தில் பறக்கும் ரயில் வழித்தடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

 

வைகை விரைவு ரயிலில் நேரமாற்றம் குறித்து பொதுமக்கள் கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தவர் தெற்கு ரயில்வேகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதாக கூறினார். வந்தே பாரத்தில் அடுத்த ஆண்டு முதல் படுக்கை வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon