போலி மருத்துவர் சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்..!
சென்னை தாம்பரம் அருகே உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் ஹோமியோபதி மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் சம்பத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
என் சி ஹெல்த் கேர் அண்ட் கிளீனிக்கில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரையடுத்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
தேனியில் கிளீனிக் நடத்தி வந்த சம்பத் என்பவர் முறையான சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்ப்பது தெரிய வந்ததை எடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





