--- --:--:-- --

கூட்ட நெரிசலில் காணாமல் போன நகை பை..!

3

யிலாடுதுறை அருகே உள்ள சோளம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சத்யா 31 வயதான இவர் தனது குழந்தைகளுடன் பந்தநல்லூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

 

அப்பொழுது தான் வீட்டில் வைத்திருந்த மோதிரம், தோடு, நெக்லஸ் டாலர் செயின் உள்ளிட்ட 22 பவுன் தங்க நகையை பையில் போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் ஏறிய பொழுது நகைப்பை காணாமல் போய்விட்டது.

 

இதனால் அந்த பெண் காவல்துறையினர் உதவியோடு பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பயணிகளை ஒவ்வொருவராக இறக்கி தேடிப் பார்த்தனர். அப்படியும் நகைகள் கிடைக்கவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon