நெல்லை வந்தது வந்தே பாரத் ரயில்..!
நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் ‘வந்தே பாரத்’ ரயில் நெல்லையை வந்தடைந்தது. ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்த நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து திருச்சி, விருதுநகர் வழியாக நெல்லை வந்தடைந்தது.‘வந்தே பாரத்’ ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இந்த ரயில், காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.





