பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு 5 பேர் கைது..!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடமளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறியும் பரிசோதனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புரோக்கர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என பரிசோதனை செய்தது அம்பலமாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்த கருக்கலைப்பு செய்வது சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுபாஷ் என்பவரின் வீட்டில் கருவின் பாலினத்தை கண்டறியும் இயந்திரங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





