--- --:--:-- --

நான்காவது புலிக்குட்டியும் உயிரிழப்பு..!

5

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மேலும் ஒரு புலி குட்டி உடல் நலம் குன்றி உயிரிழந்தது வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்ன குன்னூர் பகுதியில் நான்காவதாக புலிக்குட்டி ஒன்றை வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.

 

உடல் மெலிவுற்று உடல் நலம் குன்றி காணப்பட்டதால் வனத்துறை மருத்துவக் குழு மூலம் உடனடியாக சிகிச்சை அளித்தனர். எனினும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக புலிக்குட்டி உயிரிழந்தது.

 

ஏற்கனவே அதே பகுதியில் 3 புலி குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. புலிக்குட்டிகள் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தும் வனத்துறையினர் இக்குட்டிகளின் தாயை தேடி வருகிறார்கள்.

 

Right Menu Icon