--- --:--:-- --

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு..!

4

மைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் சனாதனத்திற்கான அர்த்தத்தை எடப்பாடி பழனிச்சாமி தமது வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருப்பதாக உதயநிதி அறிக்கை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசி இருப்பதாக அவர் மனுவில் கூறியுள்ளார். எனவே தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட கோரியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.

 

Right Menu Icon