30 வயது பெண்ணுடன் 60 வயது முதியவர் திருமணம்..!
கர்நாடகத்தில் 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது நிரம்பிய பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள அப்பை கவுண்டனஹல்லி கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஈரனா.
60 வயதான இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் ஈரனா மனைவி இறந்து போனார். தொடர்ந்து ஈரனாவை கவனிக்க அவரது மகன் மகள் மறுத்துவிட்டனர். இதனால் வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என நினைத்த அவர் இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய அணு என்பவரை வீரனாவுக்கு பிடித்து போனது. அணுவும் ஈரனாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அனுவின் குடும்பத்தினர் ஈரனாவுக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில் நேற்று கேட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இது தொடர்பான செய்தி வலைதளங்களில் போட்டோவுடன் வெளியாகி உள்ளது.






