மகளிர் உரிமைத்தொகை மற்றவர்களுக்கு ஏன் இல்லை? முதல்வர் விளக்கம்
மகளிர் உரிமை தொகை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். 1.06 கோடி பேர் தகுதி உள்ளவர்கள் என மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்துள்ளோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற காரணத்தை கூற கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.






