40 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் லிஃப்ட் கயிறு அறுந்து 7 பேர் பலி..!
மகாராஷ்டிராவில் 40 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் அறுந்து விழுந்து ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 40 மாடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வாட்டர் ப்ரூஃப் வேலை செய்து கொண்டிருந்தனர். லிப்டில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததாக தெரிகிறது.
பலத்து சத்தத்துடன் லிப்ட் கீழே விழுந்ததில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் இரண்டு பேர் படுகாயம் அடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






