பிரபல சன் டிவி சீரியல் நடிகர் திடீர் மரணம்..!
எதிர்நீச்சல் சீரியலில் பட்டைய கிளப்பி வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். சீரியலில் டப்பிங் பேசி கொண்டிருந்த போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அண்மையில் சீரியலில் அவர் உரத்த குரலில் பேசும் வசனங்கள் இணையத்தில் வைராகின. இவரின் இந்த அசாத்திய நடிப்பை தொடர்ந்து அவருக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 1990இல் இயக்குனராக விரும்பி சென்னை வந்து உணவகங்களில் பணியாற்றினார்.ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி (1993) எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 1990இல் இயக்குனராக விரும்பி சென்னை வந்து உணவகங்களில் பணியாற்றினார்.
ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி (1993) எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2011-இல் யுத்தம் செய் படத்தில் மாரிமுத்துவை நடிகராக அறிமுகம் செய்தார் இயக்குனர் மிஷ்கின்.





