--- --:--:-- --

பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

7

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தபோது ரூபா மோட்கில் அங்குள்ள கைதிகளின் அறைகளில் நேரடியாக ஆய்வு செய்தார்.

 

அதில் சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் வசதிகள் செய்யப்பட்டு கொடுத்திருப்பது தெரியவந்தது. மேலும் சசிகலா சிறையில் இருந்து சாதாரண உடையில் இளவரசியுடன் சேர்ந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்த வீடியோக்கள் வெளியானது.

 

இதேபோல் சிறையில் ஒரு தண்டனை கைதியை போல் இல்லாமல் பல்வேறு சொகுசு வசதிகளை இருவரும் அனுபவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் இதுதொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்தது.

 

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விகே சசிகலா மற்றும் இளவரசி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

 

மேலும், இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விகே சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை கைது செய்ய கர்நாடக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon