உதயநிதி தலையை வெட்டுன்னு சொல்ற நீ ரவுடி.. பொறுக்கி..சாமியார்னு சொல்லாத..!
சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி வந்தால் ரூ10 கோடி பரிசு என அறிவித்த உத்தரப்பிரதேச சாமியாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சு சரியானதுதான்; என் தலையை வெட்ட வேண்டும் என உ.பி. சாமியார் விடுக்கும் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்; கருணாநிதி தலைக்கு கூட விலை வைத்தார்கள்.
தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கிறவர்கள் நாங்கள்.. கருணாநிதியின் பேரன் நான்.. இதற்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் கழுத்தை அறுத்து கொண்டு வா என்றால் எப்படிப்பட்ட பேச்சு? அப்ப நீ என்ன சாமியார்? தலையை வெட்டிட்டு வா என சொல்லும் நீ ரவுடி, பொறுக்கி. நீ எப்படி சாமியாராக முடியும்? உதயநிதி கருத்து பிடிக்கவில்லை எனில் அப்படி சொல்லக் கூடாது என கருத்தால்தான் பேச வேண்டும்.
சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகளை வேறுபாடுகளை சொல்லக் கூடியது. அதெல்லாம் எப்படி சரி? நீங்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள்?. இவ்வாறு சீமான் கூறினார்.





