--- --:--:-- --

மகளை ஆணவக் கொலை செய்த கொடூர தந்தை..!

5

ர்நாடக மாநிலம் கோளார் மாவட்டத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தந்தையே மகளை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக எழுந்த புகார் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

வெங்கடேஷ் கவுடா என்பவர் காதல் விவகாரத்தில் 19 வயதான தனது மகள் ரம்யாவை பலமுறை எச்சரித்ததாகவும் இதற்கு உடன்படாத மகளை கொன்றுவிட்டு அந்தப் பெண் இறந்து விட்டதாக நாடகமாடியதாகவும் ஊர் மக்கள் சிலர் தெரிவித்தனர்.

 

இதன் பேரில் அந்த கிராமத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்ட ரம்யாவின் உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். அரசு மருத்துவர் அழைத்துவரப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

 

Right Menu Icon