மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு.. மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை..!
மணிப்பூரில் இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த வன்முறையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். மணிப்பூரில் இரு சம்பவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது.
நான்கு மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு நம்பிக்கை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.






