--- --:--:-- --

பொரித்த சிக்கனில் இருந்த கரப்பான் பூச்சி..!

9

சேலத்தில் உள்ள கடை ஒன்றில் சில்லி சிக்கன் வாங்கியவருக்கு அதில் வருத்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் உள்ள சில்லி சிக்கன் விற்பனை கடையில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் வாங்கியுள்ளார்.

 

அப்பொழுது கடையில் அமர்ந்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அதில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோழிக்கறியுடன் கரப்பான் பூச்சியையும் எண்ணெயில் போட்டு பொரித்தது தெரிய வரவே, கோபமடைந்த வாடிக்கையாளர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

மேலும் கடையின் அருகே கரப்பான் பூச்சிகளும் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

 

Right Menu Icon