--- --:--:-- --

எதார்த்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் உடல் முழுவதும் கட்டு கட்டாக சிக்கிய பணம்..!

4

தமிழக – கேரள எல்லையான பாலையாறு சோதனை சாவடியில் பயணியிடம் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழையாறு சோதனை சாவடியில், கேரளா காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த பேருந்தை சோதனை செய்தபோது அதிலிருந்த பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை அழைத்துச் சென்றனர். சோதனையில் அந்த பயணி தனது உடையில் கட்டு கட்டாக பணத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

 

அவரிடம் இருந்து 24 லட்சத்து 78, 500 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், விசாரணையில் அவர் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நிவாஸ் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் பணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon