இளம்பெண்ணை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ய மிரட்டும் டிஎன்பிஎல் வீரர்..!
இளம்பெண் ஒருவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் தன்னை ஏமாற்றிவிட்டு கருக்கலைப்பு செய்யச் சொல்லி மிரட்டுவதாக காவல் நிலைய நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்த மோனிஷா என்பவர் அதே பகுதியை சேர்ந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நன்றாக பழகி வந்த நிலையில் ராஜகோபாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது மோனிஷாவிற்கு தெரிய வந்தது.
இதனால் அவரை விட்டு விலகி இருந்த மோனிஷா மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜகோபாலை சந்தித்துள்ளார். இதன் காரணமாக கருவுற்ற மோனிஷாவை சந்தித்து ராஜகோபாலும் அவரது மனைவியும் கருவை கலைக்க சொல்வதாக கூறி மிரட்டுவதாக அடையாறில் துணை ஆணையர் அலுவலகத்தில் மோனிஷா புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





