--- --:--:-- --

மசூதிக்கு அருகே இரும்பு பெட்டி.. பெரும் பரபரப்பு..!

3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மசூதிக்கு அருகே கிடந்த பழங்கால பெட்டியில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தைப்பேட்டையை பகுதியில் இரும்பு பெட்டி கிடப்பதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் சென்றனர்.

 

இதனையடுத்து பல மணி நேரம் முயற்சித்தும் பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இயந்திரம் மூலம் உடைக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

 

இந்த பெட்டி குறித்து அதிகாரிகள் விசாரித்த பொழுது அதே பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர் 26 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இரும்பு லாக்கர் பெட்டியை பராமரிக்க முடியாததால் அதனை மசூதிக்கு வழங்குவதற்காக எடுத்து வந்து வைத்ததாக கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon