விசிக தலைவர் திருமாவளவன் மக்களவைச் செயலருக்கு கடிதம்..!
தமிழ்நாடு எஸ்சி எஸ்டி நலனுக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டதற்கு காரணம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மக்களவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரவுகள் பெறப்பட்டுள்ளதாக திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 2018 – 2019 ஆம் நிதி ஆண்டை ஒப்பிடும் போது 202- 2023 ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி, 90% குறைக்கப்பட்டு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதாவது 1.553 கோடி இருந்த நிதி ஒதுக்கீடு 90 விழுக்காடு குறைந்து 159 கோடியே 78 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





